வாராஹி அம்மன் பஞ்சமி வழிபாடு..!! உயர்தப்பட்ட தரிசன டிக்கெட் விலை..!! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!
தேய்பிறை பஞ்சமியில் பக்தர்கள் கூட்டம்பள்ளூர் வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 50 -ல் நீண்ட வரிசைநெரிசலை குறைக்க அறநிலையத்துறை அதிரடிபள்ளூர் வாராஹி அம்மன் கோயிலில் பக்தர்களின் நெரிசலை குறைக்க இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாயை அமல்படுத்தி உள்ளது. கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. பஞ்சமி நாட்களில் அம்மனை தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
மேலும் பக்தர்கள் கோயிலுக்கு முன்பாக வாழை இலையில் பச்சரிசி பரப்பி தேங்காய் அல்லது பூசணிக்காய் உடைத்து அதில் எண்ணை அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி அம்மனை வழிபடுகின்றனர். குறிப்பாக பஞ்சமி நாட்களில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
சமீபத்தில் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. இந்நிலையில் தேய்பிறை பஞ்சமியான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அதேபோன்று பக்தர்களின் நெரிசலையும், தரிசன நேரத்தையும் குறைக்கும் வகையில் சிறப்பு தரிசன கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிறப்பு தரிசன கட்டணத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் எழுத்தர் விஜயகுமார் மேற்பார்வையில் தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நெமிலி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..
கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..