“80% தள்ளுபடி விலையில் மருந்துகள்…” குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை..!!
80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கூட்ட தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளார். முன்னதாக இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு வீர வணக்கம் செலுத்தினார். அதன் பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை நிறைவு செய்ய ஒன்றிய அரசின் திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளதாகவும் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
#BudgetSession: President Droupadi Murmu addresses the joint sitting of both Houses.#BudgetSession | #budgetsession2025 | #Parliament | @rashtrapatibhvn | @FinMinIndia pic.twitter.com/AJKjOyZVrz
— All India Radio News (@airnewsalerts) January 31, 2025
மேலும் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்பதாகவும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் விவசாயிகள், பெண்கள் நலன் கருதி ஒன்றிய அரசு பணியாற்றி வருவதாகவும் பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகள் வங்கிக்கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..