“வட சென்னை, வளர்ந்த சென்னையாக மாறும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!!
2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும் என்றும், இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும், வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கணேசபுரம் மேம்பாலம், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் என 474 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 திட்டப் பணிகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கன்னிகாபுரம் பகுதியில் 59 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் 29 திட்டப் பணிகள் முடிவடைந்து, 166 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணிகள் விரைந்து தொடங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் 5 திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:
இந்த ஆய்வின்போது, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் அனைத்தும் காலதாமதமின்றி உரிய காலத்திற்குள், தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது 6 ஆயிரத்து 350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து பணிகளையும் முடித்து வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு தான் மரியாதை கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறித்து அவதூறு பரப்புவோர்களை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..