பெற்ற குழந்தையை கொலை செய்து நாடக மாடிய தாய்..! போலீசில் சிக்கியது எப்படி..?
கோவை தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி-சாந்தலட்சுமி தம்பதியினரின் மகள் அனுஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் 17ம் தேதி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறி, அவரது தாய் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை தட்சிணாமூர்த்தி மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டானர். பிரேத பரிசோதனை அறிக்கைகாக காத்திருந்த போலீசார் அறிக்கை வெளியானதும் அதனை கண்டு மருத்துவர்களும் சேர்ந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை:
அதில் சிறுமியின் உடலில், 33 காயங்கள் இருந்ததாகவும் உடலின் பல்வேறு பகுதிகளில் தசைகள் சிதைந்துள்ளதாகவும் இதனால் ரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மகளை சிறு வயதிலிருந்தே கரண்டியால் படிக்க சொல்லி அடித்து துன்புறுத்தியதே மரணத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தாயை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைந்தனர்.
மகளை அடித்தே கொலை செய்து விட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக கூறி தாய் நாடகமாடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் மூலம் அம்பலமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்