நடிகை கயாடு லோஹர் இதற்கு முன் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கிறார்.அதோடு, இதயம் முரளி, STR 49, ஜீ.வி.பிரகாசுடன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் டாஸ்மாக் அதிகாரிகளுடன் கயாடு தொடர்பில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் ஊழலில் சிக்கியவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ள மட்டும் கயாடுவுக்கு 35 லட்சம் கொடுக்கப்பட்தாக தகவல் கசிந்துள்ளது.
இதனால், டிராகன் நடிகை அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டு கதவை தட்டக் கூடும் என்பதால் பீதியில் இருப்பதாக கூறுகிறார்கள்.