மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டின் கையெழுத்து புரியலாம் பலரும் பல முறை அவதிப்பட்டிருப்போம் இதனை உணர்ந்து கூகுள் நிறுவனம் அதனை டீகோட் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்தை யாராலும் அவ்வளவு எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாது இதனாலேயே பல நோயாளிகள் தாங்கள் என்ன மருந்து எடுத்துக்கொள்கிறோம் என்று தெரியாமலேயே இருக்கின்றனர். இந்த அவதியை உணர்ந்த கூகிள் நிறுவனம் கூகுள் நிறுவனம் கூகுள் இந்தியா 2022 இல் பல புதிய அம்சங்களையும் தயாரிப்புகளையும் அறிவித்தது. அதில், சிறப்பான ஒன்றாக மருத்துவர்களின் மருந்து சீட்டில் இருக்கும் மருந்துகளின் பெர்யர்களி டீகோட் செய்யும் தொழில்நுட்பத்தை காந்திய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிநுட்பத்தை பொறுத்த வரையில், அதை டீகோட் மட்டுமின்றி அந்த மருந்தின் பெயரை பகிரவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போனில் இருக்கும் கூகிள் லென்ஸ் வசதியை திறந்து அந்த மருந்து சீட்டை ஒரு படம் எடுத்து தேவையான மொழியை தேர்வு செய்தாலே அதில் எழுதப்பட்டிருக்கும் மருந்துகளின் பெயர்களை எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியும் என்றும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக கூகிள் லென்ஸ் பயன்படுத்தபடுகிறது என்றும் கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.