நம் வயிறு சுடுகாடா..? திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது..?
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஆன்மிக சொற்பொழிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, உங்களுக்கு எல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா..? என கேட்டார். அதற்கு சிறுவர்களும், ஊருக்கு வெளியே ஒரு மயானத்தில் இருக்கிறது என பதில் அளித்தார்கள்..
சரி ஆடு, மாடு, கோழி எல்லாம் எங்கே இருக்கிறது..? என கேட்டார். இந்த கேள்விக்கு குழந்தைகள் பதில் தெரியாமல் திகைத்தார்கள்.., சிறுவர்களை பார்த்து வாரியார் சிரித்துக் கொண்டே , இங்கே பாருங்க குழந்தைகளே.., சுடுகாடு வேர் எங்கும் இல்லை. நம் வயிற்றில் தான் இருக்கிறது என சொன்னார்..
குழந்தைகளுக்கு மட்டுமல்ல அங்கு சுற்றி இருந்த அனைவருக்கு அவரின் பதில் புரியவில்லை.., அவர்கள் முழிப்பதை கண்ட வாரியர் சரி நான் விரிவாக சொல்கிறேன் என விளக்கம் கொடுத்தார்..
மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே “சுடுகாடு” என கூறி குழந்தையின் வயிற்றை தடவி காட்டினார், இந்த பதிலுக்கு கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.
இதற்கு மீனாக்ஷி சொக்கன் திருக்கல்யாணத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் விளக்கமும் கொடுத்திருந்தார்.., அதன் பின் சில ஆன்மீக உறையும் ஆற்றினார்..,
பல ஆன்மீக கருத்து சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே…, என சொல்லலாம். அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றிய போது சொன்னது என்ன தெரியுமா..?
“சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9 -10.30 முகூர்த்தம். பிரமன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க, நேரம் காலதாமதம் ஆகி 8.55 ஆகி விட்டது.
இதனால் பெண்ணைப் பெற்ற காஞ்சன மாலை பதறினார்., மாப்பிள்ளை வரவில்லையே எதாவது கோபம் இருக்குமோ என பலரும் பேச தொடங்கினார்கள்..
9மணி ஆக கைலாயத்தில் இருந்த இறைவன் நந்திதேவரிடம் சென்று நந்தி புறப்படலாமா..? என கேட்கிறார். அப்போது கோவில் சேவகன் ஒருவன் மதுரை மீனாட்சி கோவிலை நோக்கி ஓடி வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்து கொண்டிருப்பதாக கூச்சலிட்டான்.
திரும்பி பார்த்தால் மணவறையில் பிரம்ம தேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கும் வந்து சேர்ந்திருப்பது எப்படி என எல்லோரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
உலகத்திற்கே சூரியன் பொதுவாக காலை 6 மணிக்கு தானா உதிக்கும்.., சென்னை, கோயம்புத்தூர், மதுரை என மாறி மாறி 6 மணிக்கா உதிர்க்கும். காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பிக்கும் மாலை 6மணிக்கு மறையும் வரை காலம் பகவான் இப்படி படி அளந்து வருவார்..,
சூரியனே இப்படி என்றால் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனாக இருக்கும் சிவ பெருமான் காலை 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு அங்கு வருவதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை..,
கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு, சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்து கொண்டு பேசுவது வழக்கம்.
அப்படி ஒருமுறை திருவாரூரில் அவர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் அமர்ந்து கொண்டிருந்த சில பாதசாரியர்கள், கிருபானந்த வாரியாருக்கு மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்திருந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.
இதை பார்த்த சுவாமி, தனது தோளில் இருந்த மாலையைக் கழற்றி, உடன் வந்தவரிடம் கொடுத்துவிட்டு. அன்பரை அழைத்து மாலையை அணிவிக்க சொன்னார்.., அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை மறுபக்கம்.., அன்பர் தான் திருவாராருக்கு மாலை அணிய போகிறோம் என்ற நெகிழ்ச்சியில் இருந்தார்..,
அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ”எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்களிடம் இருந்து நமக்கு புதியது ஒன்று கிடைக்கும் என கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..