புரட்டாசி வெள்ளியில் இதை செய்ய மறக்காதீங்க..!!
வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி, கருமாரிஅம்மன், துர்கை அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடு செய்பவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டும் தான் வழிபாடு செய்ய வேண்டும்.
புரட்டாசியில் பெரும்பாலும் முகுர்த்த நாட்கள் இல்லை எனவே இந்த மாதத்தில் பூஜைகள் செய்வது குறைவு இதனால் வீட்டில் லக்ஷ்மி கடக்க்ஷம் குறையும் என சொல்லுவார்கள் அதுமட்டுமா இந்த நாளில் வழிபட தவறினால் வீட்டில் பீடை அண்டும் அதை சரி செய்ய இதை செய்தாலே போதும்
செய்ய வேண்டியது :
அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும்.
இது மகாலட்சுமி தாயார் உட்பட அனைத்து தெய்வங்களையும் நம் வீட்டிற்கு வர வைக்கும்.
அதே போல் வெள்ளிக்கிழமை மாலையிலும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும்.
இது நம் வீட்டிற்கு செல்வ வளத்தை பெருக்கி தரும் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய நாளில் தவறாமல் குலதெய்வத்தையும் வழிபாடு செய்வது மிகவும் உகந்தது.
மாலை நேரத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
அப்படி செய்வது இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.
அப்படி செல்லும் வேளையில் தெய்வத்திற்கு பூக்கள் வாங்கி கொடுங்கள்.
இது உங்கள் வீட்டில் பண தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய வழிவகுக்கும்.
இவற்றுடன் சேர்த்து பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டின் நிலை வாசலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து வைத்து விட்டு நிலை வாசலுக்கு சாம்பிராணி தூபம் ஊதுபத்தி போன்றவற்றை காட்டி வழிபட வேண்டும்.
இது உங்களுக்கு பலவகையான ஐஸ்வர்யங்களை தேடி தரும். இந்த நாளில் முடிந்தால் மகாலட்சுமி தாயார்க்கு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்து நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.