உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்து குறித்து, ஒருநாள் பயிற்சி வகுப்பு மற்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை தாலுகா மன்னம்பந்தல் ஊராட்சியில் தூய்மையே சேவை என்ற முகாம், ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சந்தானம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகளை தொடக்கி வைத்து மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகளை பல ஆண்டுகளாகியும் சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை கம்யூனிஸ்டுகள் இணைந்து நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று துறைச் சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆற்காடு நகரப் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..