கெளரி விரதம், சஷ்டி விரதம் அன்று இதை செய்ய மறக்காதீர்கள்..!
இன்று கெளரி விரதம் மற்றும் சஷ்டி விரதம் என்பதால் இன்று அம்பிகைக்கு விரதம் இருந்து.., இஷ்ட தெய்வத்தை வணங்கினால் திருமண வரன் கிடைக்கும். மேலும் நோயால் அவதிப்படுவார்கள் இந்த விரதம் இருந்தால் அதில் இருந்து விடுபடுவார்கள்.
முருகனுக்கு சிறந்த விரதம் சஷ்டி விரதம், இந்த சஷ்டி நாளில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், எல்லாம் செல்வங்களும் கிடைக்கும். தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்துவந்தால், பில்லி சூனியம், தீய சக்தி பிடி போன்றவற்றில் இருந்து முருகன் காத்திடுவார்.
சஷ்டி விரதம் இருந்து மாலை விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், குழந்தை வரம் வேண்டும் என நினைப்பவர்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருந்து வந்தால், நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.