அமாவாசை விரதம் இதை செய்ய மறக்காதீங்க..!
குலதெய்வம் என்பது உங்கள் முன்னோர்கள் வழிபட்ட குடும்ப தெய்வங்களாகும். அவைகளை அம்மாவாசை பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்வது எந்த தவறும் இல்லை. ஆகையினால் நீங்கள் யாருடைய சொற்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்கள் மன அமைதிக்காக உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாத்வீகமான முறையில் நெய்விளக்கு ஏற்றி.
அமாவாசை நாளில் செய்ய வேண்டியது :
இந்த உன்னதமான நாள் அம்மன் வழிபாடு,முன்னோர்களை வழிபாடு, குல தெய்வ வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாகும். சென்னை: அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் :
அகல் வைத்து , தூய தீபங்கள் ஏற்றி,சமைத்த உணவு மற்றும் பலகாரங்களை இலையில் படைத்து நம் முன்னோர்களை நினைத்து வணங்கவேண்டும். பின் அனைத்து படையல்களிலுமிருந்து உணவு மற்றும் பலகாரங்களை கொஞ்சமாக எடுத்து காக்கைகளுக்கு அளிக்கவேண்டும்.
– லோகேஸ்வரி. வெ