விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முக்கிய அப்டேட்…
விஜய் சேதுபதி:
தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், நானும் ரௌடி தான் , 96 போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது ‘விடுதலை 2’ பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
ஆரம்ப காலக்கட்டத்தில் முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி ஹீரோவான பிறகும் வில்லன், கெஸ்ட் ரோல் என எல்லா கதாபாத்திரத்திலயும் நடிப்பார். இதனால் இவரை ‘மக்கள் செல்வன்’விஜய் சேதுபதி என இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
50வது படம்:
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி ரும் ‘மகாராஜா’ படத்தை இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமிபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் படத்தை பற்றிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
ரிலீஸ் தேதி:
அதன்படி மாகாராஜா திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்