“ஆணவம் கொள்ளாதே.. ஆனந்தம் கொள்..” அகிலமும் உன் கையில்..!
கவிதை எழுதுவது என்றாலே ஒரு தனி அழகு.., அதிலும் ஒரு சில கவிதைகள் நமக்கு படிக்கும் போதே.., நமக்கு இதுபோல் கவிதை எழுத தூண்டும்.,
“வெள்ளை காகிதத்தின் மேல் ஒட்டிக்கொண்ட
அழகான ஓவியம் போல் வானவில்லும்..
பூக்கள் மீது ஒட்டிக்கொண்ட வண்ணமும்..
ஆடைகளின் அழகை கூட்டும் வண்ணமும்..
அழகு தான்..
நம்முடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்ட
நிறத்திற்கு மட்டும் ஏன் பாகுபாடு..?
வண்ணத்துபூச்சியை போல் தேனை மட்டும் தேடி ஓடுவோம்..
தேவதைகள் வண்ணபூக்கள் தூவும் காத்திருப்போம்..”
தோல்வியை கண்டு துவண்டு போகாதே தோழியே..
தோளில் மாலை வந்து சேரும் வரை தோய்ந்துவிடாதே..
பின் வெற்றி வந்ததும் ஆணவம் கொள்ளாதே..
ஆனந்தம் கொள்.., அகிலமும் உன் கையில்..
வாசகர் பெயர் : சாலா பழனியப்பன்..
இதுபோல உங்களின் திறமைகளையும் நம் மதிமுகம்-இல் வெளிப்படுத்த வேண்டுமா..? கீழே உள்ள இந்த மின் அஞ்சல் அல்லது வாட்ஸ் – அப் எண்ணிற்கு உங்கள் திறமை பற்றிய விவரங்களை அனுப்புங்கள்..
GMail ID : Admin@madhimugam.com
Whatspp Num : 96009 45007
பங்கேற்கும் வாசர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு
குறிப்பு : நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விவரங்களை மற்ற மீடியாக்களுக்கு அனுப்பி இருக்க கூடாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..