கோடையில் தண்ணீர் அதிகம் செலவாகிறதா..? இதை செய்து பாருங்க
கொளுத்தும் வெயிலில் அனைவருக்கும் அதிகம் தேவைப்படும் ஒன்று “தண்ணீர்” சிலர் சிக்கனமாக செலவு செய்வார். பலர் எப்படி சிக்கனப் படுத்துவது என்று தெரியாமல் தவிப்பார்.
ஆனால் இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். இந்த சில டிப்ஸ் களை பாலோ செய்தாலே போதும். தண்ணீரை சிக்கனம் செய்து விடலாம்.
தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பொழுது, அது முழுவதுமாக நிறைந்து தண்ணீர் வெளியே சிந்தும்படி விடக்க கூடாது.
கார் மற்றும் இருசக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள், கார் மற்றும் பைக் கவர் கொண்டு வாகனத்தை மூடி வைக்க வேண்டும். இதனால் மாசு படாமல் இருக்கும். எனவே அடிக்கடி நீங்கள் வாகனத்தை கழுவ வேண்டி இருக்காது .
பல் துவக்கும் முன்னும், குளிக்கும் முன்னும் தண்ணீரை திறந்து விட்டு செய்ய வேண்டும். ஒரு பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம்.
உணவு காய்கறிகள் கழுவும் பொழுதும், அதை வெட்டிய பின் அலசிய தண்ணீரையும் கீழே ஊற்றாமல், செடிகளில் ஊற்றலாம்.
சமைத்த பாத்திரைத்து கழுவும் பொழுது, நேரடியாக குழாய் திறந்து விட்டு கழுவாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு கழுவலாம்.
உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் இருக்கும் செடி களுக்கு, காலையும் மாலையும் 6 மணிக்கு மேல் தண்ணீர் விட வேண்டும். காரணம் ஆவியாதல் குறைந்து ஈரப்பதம் நீண்ட நேரம் அதிகமாக இருக்கும்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post