தாக்கும் வெயிலில் செடிகளின் பராமரிப்பு
அடிக்கும் வெயிலில் நாமே தண்ணீர், குளிர் பானங்கள் என குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள பலவும் செய்கிறோம். ஆனால் நாம் வளர்க்கும் செடிக்கும் தண்ணீர் மிக அவசியம் என்று நாம் நினைக்கிறோமா..?
நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களிலே செடியை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும். அதற்காக சில டிப்ஸ்
கோடையின் வெப்பத்தை தணிக்க செடிகளுக்கு சரியான அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.. காலை மாலை என இரு வேலையும் ஊற்ற வேண்டும்.
மதிய வேலையில் தண்ணீர் ஊற்றும் பொழுது சிறிது கவனம் தேவை சூரியனின் வெப்பத்தால், தண்ணீர் சூடாக இருக்கும் அதை ஊற்றும் பொழுது அது வேர்களுக்கு சென்று செடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தண்ணீர் வேர்களுக்கு செல்லும் பொழுது வெப்பத்தால் ஆவியாகி வெளியேறும். எனவே வாரத்தில் இருமுறை வேர் ஊன்றும் அளவுக்கு அதிக தண்ணீரை ஊற்ற வேண்டும்.
அதேப் போல், இதை தினமும் செய்வது தவறு. அதாவது, அதிக தண்ணீர் ஊற்றுவது. தினமும் அதிக தண்ணீர் ஊற்றினால் வேர் அழுகி விடும். வேருக்கு செடிக்கும் இடையே பூஞ்சை நோய் ஏற்படும். எனவே மண்ணின் ஈர பதத்தை பொறுத்தே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
முக்கியமாக தக்காளி, கத்தரி மிளகாய், ரோஜா செடிகள் வெயிலின் தாக்கத்தால் சீக்கிரம் வாடி விடும் எனவே இவற்றை நிழல் இருக்கும் பகுதியில் வைத்து பாதுகாப்பது நல்லது.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post