15 பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி வாழ்க்கையை கெடுத்த டாக்டர்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் ஒன்று என சொல்லுவார்கள்.., ஆனால் தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைன் மூலம் மாப்பிள்ளை, மணப்பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளும்படி மாறிவிட்டது.., அதை பலர் அவர்களுக்கு சாதகமாகவும் பயன் படுத்தி கொள்கின்றனர்.
இதனால் பல பெண்களும், ஆண்களும் பாதிக்கப்படுவது வழக்கம். அப்படி ஒருவர் 15 பெண்களிடம் திருமணம் செய்துக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
டிஜிட்டல் மோசடி திருமணம் :
இணையதளம் வாயிலாக கடந்த 9 ஆண்டுகளாக ஆண் ஒருவர் 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த மகேஷ் கேபி வயது 34, இந்த வாலிபர் பண்ணஷங்கரி என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவருக்கு 4 குழந்தைகளும் இருந்துள்ளது.
போலி டாக்டர் :
திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் தன்னை ஒரு மருத்துவர் என்றும்.., இன்ஜினியர் என்றும் திருமண பொருத்த இணையதளங்களில் ஐடி உருவாக்கியுள்ளார்.., அந்த ஐடி மூலம் 15க்கும் மேற்பட்ட பெண்களை இணையதளம் மூலம் சந்தித்து திருமணம் செய்துள்ளார்.
தன்னை மருத்துவர் என நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலி கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். திருமணம் செய்துகொண்ட பெண்கள் அனைவரிடமும் பொருளாதார ரீதியாக, வசதியான வீட்டு பெண்களாக பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி முதலில் பேச ஆரமித்துள்ளார். நாளடைவில், காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் இருந்து லட்சம் கணக்கில் வரதட்சணையும் வாங்கி கொண்டுள்ளார்.., தேவைகள் முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விடுவாறாம். மீண்டும் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருக்கும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பெண்களை ஏமாயிற்றுவதையை இவர் வழக்கமாக வைத்துள்ள நிலையில் ஒரு பெண் மட்டும் ஏமாற்றப்பட்டது தெரிந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஏமாற்றப்பட்ட பெண்ணின் புகார் :
கடந்த ஜனவரி மாதம் மைசூருவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.., திருமணம் ஆனா சில நாட்கள் கழித்து.., சொந்தமாக கிளினிக் வைக்க வேண்டும் என சொல்லி திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் கேட்டுள்ளார். அந்த பெண் தர மறுத்ததால் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து விட்டு பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
பின் ஏமாற்றம் அடைந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இவரது புகைப்படங்கள் கொடுத்து பெண் அளித்த புகாரின் பெயரில் காவல் துறையினர் விசாரணை ஆரமித்துள்ளனர்.
அப்பொழுது தான் இவர் ஒரு பெண்ணை ஏமாற்றவில்லை, இதுபோல பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்தது. பின் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரிடம் காவல் துறையினர் சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மகேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.
எனவே 15க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பெயரில் காவல் துறையினர் செய்த விசாரணையில் தலைமறைவாகிய மகேஷை மொபைல் எண்னை ட்ராக் செய்து நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போலி மருத்துவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே இவரை பற்றி உண்மைகள் வெளிவரும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.