கருவில் பிறந்து கல்லறை சென்ற பின், சாம்பலாக போகும் மனிதனின் வாழ்க்கையை உணர்த்துகிறது “திருநீறு”.
மண்ணில் பிறந்த மனிதனாக இருந்தாலும், மண்ணில் விதைக்கும் மரமாக இருந்தாலும், ஆயுள் முடிந்த பின் இருவரும் மண்ணுக்குள்ளே தான் செல்கிறோம். இருவரும் ஒன்று தான் என்பதை உணர்த்துவதற்காக, நம் நெற்றியில் திருநீறு வைக்கின்றோம்.
நம் உடலில் உள்ள பாகங்களில் நெற்றி மிக முக்கியமான ஒன்று, நெற்றி வழியே மிக அதிக சக்தி வெளியேறும், அதை உள்ளிழுக்கவும் செய்கிறது.
நம் உடலில் உள்ள சூரிய கதிர்களின் சக்தியை நெற்றி வெளியேற்றும் வேலையை “திருநீறு” செய்துவிடும்.
எனவே தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மேலும் திருநீறை சிறிது தண்ணீரில் கலந்து குடித்தால் அனைத்து துஷ்ட சக்தியும் விலகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
Discussion about this post