ரூபாய் நோட்டுகளுடன் K வார்த்தை சேர்ப்பது ஏன் தெரியுமா..?
நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தேவைகளில் ஒன்றாக பணம் இருந்த காலம் போய்., பணமே அன்றாட வாழ்க்கை ஆகிவிட்டது. அந்த பணத்திற்கு கூட இப்போ புதுசா பேர் வச்சு அழைக்கிறார்கள். அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க ஃபர்ஸ்ட் எல்லாம் பார்த்தீங்கனா ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என சொல்லுவார்கள்.
ஆனா இப்போ 1k, 2k, 3k, இப்படி சொல்லிட்டு இருக்கோம் ஏன் அப்படி சொல்றாங்கனு எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..? ஏன்னா ஃபர்ஸ்ட் வந்து ஆயிரத்துக்கு முதல் எழுத்து T தான் அதனால் நமக்கு தோணும் ஏன் T போட்டு இருக்காங்கன்னு
ஆனால் ஒரு CONFUSE இருக்கு அது என்னவென்றால் இப்போ ட்ரில்லியன் இருக்கு அதுக்கும் முதல் எழுத்து T தான். உதாரணமாக 1trillien, 2 trillien இப்படி சொல்லும் பொழுது அதேமாதிரி THOUSAND க்கும் 1000T, 2,000T போடும் பொழுது குழப்பம் வருதாகவும், அதை சரியாக கணக்கிட முடியாத நிலை ஏற்படும்.
இதை தவிர்க்க தான் 1000 க்கு K போடுகிறார்கள். எதற்காக K..? போடுகிறார்கள் தெரியுமா..? அதாவது K என்பதற்கான அர்த்தம் என்னவென்றால் கிலோ என்று சொல்லபடுகிறது..
கிரேக்க மொழியில் K என்றால் ஆயிரத்தை குறிக்குமாம் இந்த கிலோ என்ற வார்த்தை கிரேக்க மொழியான கிளியோ என அழைக்கப்படும்.. எனவே தான் ஆயிரத்தை சுருக்கி சுருக்கி k என்று சொல்கிறார்கள்.
இதுபோன்ற பல உபயோகமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து நம் மதிமுகம்-ல் இணைந்திடுங்கள்..
– கவிப்பிரியா