தேர் வடம் பிடித்து இழுப்பது ஏன் தெரியுமா..? மஹா பெரியவா சொன்னது..
தேரோட்டம் பற்றியும் தேர் வடம்பிடித்து இழுப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் காஞ்சி மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வருகிறது.
“நிலக்கிழார் என்ற வயதான நபர் ஒருவர் பிள்ளைங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட சொத்து தகராறினால் மனம் உடைந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரின் மன வேதனைகளை அறிந்து கொண்ட பெரியவர் அவரிடம் சென்று.
நீ தேர் இழுத்திருக்கிறாயா..? என கேட்டார்.. அதற்கு நிலக்கிழார் “இல்லை” என பதில் அளிக்கிறார்.
“ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள். எல்லாம் நன்றாக முடியும்” எனமஹா பெரியவர் ஆசீர்வாதம் செய்தார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் மஹா பெரியவரை சந்தித்து நிலக்கிழார், தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்து விட்டது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என சொன்னார்.
தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது.., என அவர் கூறினார். “தேர் இழுத்தாயோ” என காஞ்சி மகான் கேட்க..? ஆமாம் ஐயா, நான் தேரை இழுத்த பிறகு தான் எனக்கு எல்லாமே நல்ல விதமாக நடந்தது என கூறினார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளால் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய முடியாது தேர்த்திருவிழா அன்று தேரை காண்பது இறைவனை கண்பதற்கு சமம்.
கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தெய்வ சாந்நித்தியம் வியாபித்துக் கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தியானது, ஊர் முழுவதும் வெளிப்படும்.
ஊருக்குள் சுற்றி திரியும் தீய சக்திகள் எல்லாம் அப்போது பறந்து ஓடி விடும். தேர் இழுப்பவர்களுக்கு பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்காத மனிதர்களால் மட்டுமே அனைத்தயும் தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே உணர்த்துவது தான் தேரோட்டம்..
அனைவராலும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாது.., அப்படி கலந்து கொண்டாலும் தேர் வடம் பிடித்து இழுக்கவோ, தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்யவோ முடியாது, அப்படி நாம் செய்ய வேண்டும் என்றால் நாம் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அப்படி கடந்த ஜென்மத்தில் புண்ணியம் செய் திருந்தால் மட்டுமே தேர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேரோட்டத்தை காண முடியும். தேர் வடம் பிடித்து இழுக்க முடியும் என மஹா பெரியவா சொன்னார்.
நாம் தேரை வடம் பிடித்து இழுக்கும் போது ஆயிரம் கணக்கானோர் மனதில் ஒருவிதமான மகிழ்ச்சி தொடங்குகிறது. அங்குள்ள மனிதர்கள் அனைவரும் கடவுளின் அருளை வேண்டி காத்திருக்கும் போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தான சக்தியாக மாறுகிறது. ஒரு அளப்பரியதாக தோன்றுகிறது.
தெய்வத்தின் வாகனம் தேர். அந்த நேரத்தில் தேரினை நாம் இழுக்கும் போது சக்தி நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டுவதும் மனமுருகி என் குறைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக்கொள்வதும் பக்தியின் வெளிப்பாடு என சொல்லலாம்., அப்படி இறைவனின் அருள் வேண்டி காத்து கிடக்கும் மக்களுக்கு தெய்வமே சூட்சுமமாக வந்து சக்தியை வழங்கு வார்கள் என்பதும் ஐதீகம்.
நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர் திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர் திருவிழாவிலும் கலந்துகொள்ளச் செய்தது. அப்படி செய்ததால் கடவுளின் அருள் கிடைத்ததோடு வழக்கும் அவருக்கு சாதகமாக அமைந்தது.
தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கடவுளின் அருள் பலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இதுவரை பீடித்திருந்த நோய்கள் தீரும். பாபவினைகள் தீரும். வழக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் சிக்கல்களும் அகலும்.
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதும் உற்ஸவ விழாவிற்கும் பக்தர்களுக்கும் உதவிகள் புரிவதும் தேர் பார்ப்பதும் தேர் வடம் பிடித்து இழுப்பதும் மிகப்பெரிய புண்ணியத்தைத் தந்தருளும்.
தேரோட்டம் எந்த வித பிரச்சனையும் இன்றி நல்லவிதமாக பக்தர்களின் மனம் குளிர நடக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் கோரிக்கையும் ஆக இருக்கும்.. என அவர் கூறினார்..
நம என்கிற இரண்டெழுத்தின் மகிமை..!
ஒவ்வொரு தெய்வத்திற்குரிய மந்திரத்தைச் சொல்லும் போதும்,
நம என்ற வார்த்தையை சேர்த்து உச்சரிக்கிறோம்.
நாராயணய நம, சிவாய நம, *கணேசாய நம* இப்படி சில உதாரணங்களைக் காட்டலாம்.
நம என்ற சொல்லுக்கு உனக்கே
நான் உரியவன் என்று அர்த்தம்.
ஓம்காரமாக விளங்கும்
நாராய ணனே, சிவனே, கணேசனே..!
உனக்கே நான் சொந்தமானவன் என்பது *நம* என்கிற மந்திரத்தின் ஆன்மீக பொருள்.
அதாவது இந்த உலகத்திற்கு நீ வந்து விட்ட பிறகு, என்றாவது ஒரு நாள் நீ செல்லத்தானே போகிறாய் என்பது அர்த்தமாகும்
அவ்வாறு செல்லும் நாளில் இறைவா! உன்னால் வந்த நாங்கள், உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று பொருள்.
மண் உலகில் நடக்கும் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் அமைதியாகவும், மன நிம்மதியுடனும் நாம் வாழ, பெரியவா சொன்ன “நம” மந்திரங்களைச் சொல்வது மிகவும் சிறந்தது..
-வீர பெருமாள் வீர விநாயகம்