அவள் என்றும் யாதுமாகி நிற்பாள் – எழுத்து கிறுக்கச்சி கவிதை -11
பெண் என்றாலே வியப்பு தான்..,
ஏனோ அவளில் மட்டும் அத்தனை படைப்பு..,
வியந்து தான் போனேன் பெண்ணே..,
நானும் உன்னை பார்த்து..,
பொறாமை இல்லை என்று பொய் சொன்னாலும்..
மெய்யாக சொல்கிறேன்..
மெய் சிலிர்த்து விடுகிறது உன் திறமை அதை கண்டு.
ஆடை அதை அழகாக்கி,
ஆடல் அதை கற்பித்து,
சிவந்த உன் கைகளால்
பிறர் கையையும் சிவக்க செய்கிறாய் மருதாணி கோலம் போட்டு.
பெண்ணே உன் ஓய்வு நேரம் தான் எது..
உறங்கும் போது தான் உறக்கம்
அதிலும் உன் முன்னேற்ற கனவு காணும்..
-லோகேஸ்வரி.வெ