வெங்காயம் கட் பண்ணும் போது மட்டும் ஏன் கண்ணீர் வருது தெரியுமா…??
மற்ற காய்கறியை அரியும் போது நமக்கு கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வருவதில்லை .
ஆனால் வெங்காயத்தை அரியும் போது மட்டும் நமக்கு கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வருகிறது அதா. அதை நாம் அனைவரும் அறிவோம் .
இந்த கண் எரிச்சட் என் வருகிறது என்றும் யோசித்திருப்போம் .
இதற்கான காரணம் வெங்காயத்தில் இருக்கும் ஒரு வகையான அமிலம் தான்.
இந்த அமிலத்தின் பெயர் சல்ப்யூரிக் அமிலம்.
இந்த அமிலம் வெங்காயத்தில் அதிகமாக உள்ளதால் கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வருவதற்கு காரணமாக உள்ளது. நாம் வெங்காயத்தை நறுக்கும் போது அந்த சல்ப்யூரிக் அமிலமானது காற்றோடு கலந்து ஆவியாக மாறுகிறது.
அப்போது நம் கண்களில் உள்ள நரம்புகளில் கண் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
வெங்காயத்தில் புரதம் , கால்சியம் ,இரும்பு , வைட்டமின் ,கார்போஹைட்ரெட்ஸ் மற்றும் போஸ்போரஸ் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது .
வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் இந்த கண் எரிச்சலை தடுக்க சில வழிமுறைகள் :
1) வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடு கொள்ளவும். பின்பு அந்த வெங்காயம் மூழ்கும் வரையிலான நீரை ஊற்றவும். அந்த நீரில் சிறுது கல் உப்பையும் சேர்த்து கொள்ளவும் . சிறிது நேரம் கழித்து அந்த வெங்காயத்தை நறுக்கினால் நமக்கு கண் எரிச்சல் ஏற்படாது.
2) எப்போதும் நாம் பயன்படுத்தும் கத்தியானது மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும் .அப்போது தான் நம்மால் விரைவாக காயை நறுக்கிட முடியும். அப்படி விரைவாக நறுக்கும் போது நம்மால் கண் எரிச்சலில் இருந்து தப்பிக்க முடியும்.
3) வெங்காயத்தை நறுக்கும் முன் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும் . 15 நிமிடத்திற்கு பின் எடுத்து அதனை நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது.
-ரோகினி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..