பெருமாளுக்கு பஜனை செய்வது ஏன் தெரியுமா..?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறந்த மாதமாக இருக்கிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் சைவ உணவுகளை எடுத்துக்கொண்டு அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் ஏராளம்
நவகிரகங்களில் புதன் கிரகத்திற்கு உரிய மாதமாக திகழ்வது “புரட்டாசி” புதன் கிரகத்தின் அதிதேவதையாக திகழ்பவர் “மகாவிஷ்ணு” எனவே தான் புதன் கிரகத்தின் அருளை பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது.

மகாவிஷ்ணு என சொல்லப்படும் பெருமாளின் அம்சமாக விளங்கும் புதனுக்குரிய வீடு கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில் தான்.
எனவே தான் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்வது, ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடத்துவது போன்ற வழிபாடுகள் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக பல புராண கதைகளில் சொல்லி இருகின்றனர். எமபயம் நீங்கவும் துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபட்டால் எம பயம் நீங்கும்..
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறந்த பலனை கொடுக்கும். இன்னும் பெருமாளுக்கு உரிய பூஜைகள் செய்து அன்னதானம் செய்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும். புண்ணியமும் கிடைக்கும்..
Discussion about this post