வாழை இலையில் உணவு பரிமாறுவது ஏன் தெரியுமா..?
சாப்பாடு என்றாலே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.., அதிலும் சாப்பாடு பிரியர்கள் அதிகம்.., பலருக்கும் உணவை தேடி தேடி போய் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக தான் இருக்கிறதா..? சில சமையம் அதுவே சிக்கலில் முடிந்து விடுகிறது.
உணவு சாப்பிடுவதற்கு என்று ஒரு ,முறை இருக்கிறது.., எந்த உணவை சூடாக சாப்பிட்டாலும் அதை வாழையிலையில் வைத்து சாப்பிடும் பொழுது எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. முக்கியமாக அல்சர் மற்றும் வயிற்று புண்களை குணமாக்கும்.
வாழை இலையை பதப்படுத்தி பயன் படுத்தலாம், வாழை இலையில் வேதிபொருட்கள் எதுவும் இல்லை என்பதால் இதை பதப்படுத்தி உபயோகிக்கலாம். வாழையிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டும்.., க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டும் சமம் என கூறுகின்றனர்.
வாழை இலையில் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை நீங்கும், உடல் வலி குறையும், சளி குணமாகும் வாழையிலையை தீக்காயம் பட்ட இடத்தில் வைக்கலாம் மற்றும் வாழை இலையை சித்த மருத்துவத்திலும் அதிகம் பயன் படுத்துவது உண்டு.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..