கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா..?
கோவில்களுக்கு சென்றால் சாமி தரிசனம் செய்வதற்கு முன் பலரும் அர்ச்சனை செய்வது உண்டு.. அப்படி கோவில்களில் அர்ச்சனை செய்யும் போது பூ, பழம், மட்டுமின்றி தேங்காய் வைத்து அர்ச்சனை செய்வது உண்டு..
ஆனால் அர்ச்சனை செய்யும் முன் கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய்க்கு பின் ஒரு ஆன்மிக குறிப்பு உண்டு.. கோவில்களில் மட்டும் அல்ல வீட்டில் நாம் பூஜை செய்யும் போது வீட்டில் தேங்காய் உடைத்த பின் கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் ஏன் தெரியுமா..?
கோவில்களில், வீட்டிலும் பூஜை நேரத்தில் கடவுள்களுக்கு நாம் தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த பழக்கம் நமது முன்னோர் காலத்தில் இருந்தே இருக்கிறது.
தேங்காயை குறிக்கும் 3 :
அதே சமயம் பூஜைகளில் தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
பொதுவாக தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதற்குள் மென்மையான காய்ப்பகுதியும், அதனுள் நீரும் இருக்கும்.
வெளியே இருக்கும் தேங்காய் ஓடு பிரபஞ்சத்தை குறிக்கிறது. அது உலகத்தை குறிப்பது ஆகும்.
உள்ளே உள்ள வெண்ணிறமான காய்ப்பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
அதற்குள் இருக்கும் இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒட்டி இருக்கின்றது.
ஆன்மீக கதை :
ஜீவாத்மாவானது மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் இருக்கின்றது. அதுபோல வெள்ளை காய்ப்பகுதியானது, நீரை காண முடியாமல் ஓடு மறைத்துக் கொண்டு இருக்கிறது…
ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலை இது உணர்த்துகிறது…
உடைப்பதற்கான காரணம் :
அதாவது நாம்மை சுற்றியுள்ள சில நன்மைகள் இருந்தாலும் அதே சமயம் சில தீய செயல்களும் அப்படியாக நாம் வேண்டுதல் வைக்கும் நேரத்தில்.. சில நற்பலன்கள் முன்வந்து நிற்பதை விட சில தீய செயல்களும் முன் வந்து நிற்குமாம் அப்படி நாம் வேண்டுதல் வைக்கும் நேரத்தில் பல தடைகள் முன் நின்றாலும் அதை தகர்த்து எரிந்து நாம் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஆன்மீக உண்மை..
கோவில் மற்றும் வீடுகளில் பூஜை நேரத்தில் தேங்காய் உடைப்பதற்கும் இதுதான் காரணம். இவ்வளவு உட்கருத்துகள் இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் வைத்து வழிபடுகிறோம்.
சூறை விடக் காரணம் :
இன்னும் சிலர் நினைத்த செயல் நிறைவேறி தேங்காயை சூரையிடுவார்கள்.. அதாவது இதை சிதறு தேங்காய் எனவும் சொல்லுவார்கள்..,
அப்படி அந்த தேங்காயை சூறையிடும் போதும் அது துண்டு துண்டாக உடைக்குப்படும் அப்படி உடைத்தால் நம் துன்பங்கள் நம்மை விட்டு சிதறி சென்று விடும் என்பது ஐதீகம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..