ராட்டினத்தில் சுற்றும் பொழுது இதை கவனித்தது உண்டா..?
இராட்டினம் சுற்றும் போது நமக்கும் ஒரு வகையான உணர்வு இருக்கும் எடுத்து காட்டாக தலை சுற்றுவது அதிவேகமாக நாம் காற்றையும் மீறி சுற்றுவது போன்ற எண்ணம் உண்டாகும் ஆனால் பூமி சுழல்வதை நம்மால் ஏன் உணர முடியவில்லை ?என்ற கேள்வி நாம் அனைவர் மனதிலும் தோன்றிருக்கும்.
இதற்கான காரணம் பூமியானது எந்த திசை வேகத்தில் சுடுகிறதோ அதே வேகத்தில் தான் நாமும் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
பூமி இராட்டினத்தை போல் மெதுவாக தொடங்கி அதிவேகமாக சுற்றுவது இல்லை ஒரு வேலை பூமியின் வேகமானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுற்ற தொடங்கினால் நம்மால் அந்த வேறுபாட்டினை உணர முடியும்.
சிறந்த எடுத்து காட்டாக நாம் பயணிக்கும் பேருந்து அல்லது மகிழுந்து(கார்) போன்ற வாகனங்கள் ஒரு சீரான வேகத்தில் மற்றும் சீரான பாதையில் பயணிக்கும் போது நமக்கு வண்டி நகர்வது போன்ற உணர்வு இருக்காது.
அதுவே திடீரென அதிகமான வேகத்திலோ அல்லது குறைவான வேகத்திலோ அதன் வேகத்தின் மாறுதலால் நாம் பயணித்து கொண்டு இருப்பதை உணரலாம் மற்றும் நாம் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் வேகத்தடை, பள்ளம்,மேடு போன்று வேறுபாடு ஏற்பட்டால் நம்மால் பயணித்து கொண்டு இருப்பதை உணர முடியும்.
இதுவே பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியாததற்கு காரணமாகும்.
Discussion about this post