இந்த வாரம் பண வரவு எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக ஆன்மீக தகவல்கள் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம்.., அதில் இன்று நாம் பார்க்க இருப்பது பணவரவு தரும் தெய்வங்கள்.., எந்த தெய்வத்தை எந்த ராசிக்கார்கள் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக் காரர்கள் :
மேற்கண்ட நான்கு ராசிக்காரர்கள் திங்கள்கிழமை அன்று கபாலீஸ்வரரை வழிபட வேண்டும். அப்படி செய்வதால் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனைகள் இன்று தீர்விற்கு வந்து விடும்.
மேஷம், கடகம், மகரம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் :
இந்த நான்கு ராசிக்காரர்களும் முருகனின் மற்றொரு அவதாரமான சுப்பிரமணியரை வழிபட வேண்டும். அல்லது புதன் கிழமைகளில் சுக்கிர ஹோரையில் சுப்பிரமணியரை வணங்கலாம். அப்படி வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக் காரர்கள் :
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த நான்கு ராசிகர்களும் பத்மாவதி அம்மனை துளசி மாலை கொண்டு சேவித்தால் தீய வினைகள் விலகி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post