“ஹெல்த் வாக் சாலை திட்டம்” முதலமைச்சரின் அசத்தல் திட்டம் நடைமுறைக்கு எப்போ வருகிறது தெரியுமா..?
நவம்பர் 4-ம் தேதியில் “ஹெல்த் வாக் சாலை திட்டம்” தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும், அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடை பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..