குழு குழு கோலி சோடாவிற்கு எத்தனை வயது தெரியுமா..?
தமிழ் நாட்டில் முதன்முதலில் விற்பனைக்கு வந்த வேலூர் கோலி சோடாவுக்கு வயது 100.
வேலூர் கண்ணுசாமி முதலியார், 1924 இல் ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் சிறிய
பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு வைத்தார்.
அந்தக் காலத்தில் சென்னை பெங்களூர் சாலையில் பயணம் செய்தவர்கள்
வழியில் உள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்ததை மறந்திருக்க மாட்டார்கள்.
முதன் முதல் கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.
அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது.
தற்போது பழம் புளூபெர்ரி கோலா எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை
வட மாவட்டங்கள் முழுவதும் விற்கின்றார்கள்.
1990-ம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் வந்ததால் ஓரளவு விற்பனை குறைந்தது.
2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு பருக வேண்டும் என பொதுமக்களிடையே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது.
அதன் காரணமாக 2017-ம் ஆண்டுக்கு பிறகு கோலி சோடா விற்பனை மீண்டும் சூடு பிடித்தது.
Discussion about this post