பாதயாத்திரை போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? கதறும் அண்ணாமலை ..!
என் மண் என மக்கள் முதல் கட்ட பாதயாத்திரையை பொறுத்தவரை மிகவும் கடுமையாக இருந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் 40°க்கும் மேல் அனல் பறக்கக்கூடிய இடங்களில் நடைபெற்றது. அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது, அதுமட்டுமின்றி மக்களும் கலந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது.
அதே சமயம் தமிழகத்தில் அதிகமான பிரச்சனைகளும் தென்தமிழகத்தில் உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு தண்ணீர் பிரச்சனை விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது. அதனால் தான் தென் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம்.
பாதயாத்திரை செல்லும் பொழுது அனைவரும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார் ஆனால் சிலிண்டர் விலையை மற்றும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். நானும் அவர்களிடம் பிரதமர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தேன்.
தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம், இங்கேயும் பல்வேறு மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம்.
பாதயாத்திரை செல்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? அது பாதயாத்திரை போறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். என்ன கேள்வி கேட்பவர்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லுறன் நீங்க பாதையாத்திரை போயி பாருங்க, இந்த பாதயாத்திரை மூலம் எனக்கு மக்களின் ஆதரவு கிடைகிறது என நம்புகிறேன்.
அந்த அன்பிலும் ஆதரவிலும் என் கால் வலிகள் பறந்து விடும் என அண்ணாமலை செய்தியாளர்கள் முன் பேசியுள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..