தமிழகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17ஆம் தேதி என்று தமிழ் காலண்டர்களில் பதிவாகியிருந்தது. மேலும், 1881ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ், தமிழக அரசும், அரசு விடுமுறை நாள்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று அறிவித்திருந்தது.
ஆனால், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு பல்வேறு கோயில் நிர்வாகிகளும், ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றாக செப்டம்பர் 18ஆம் தேதிதான் கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தன.
இதனை ஏற்று விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாள்களே உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பொங்கல் உள்ளிட்ட ஒரு சில பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமையன்று வந்ததால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோர் மிகுந்த கவலை அடைந்திருந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறை தற்போது திங்கள்கிழமைக்கு மாற்றியிருப்பது பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post