புதன் தோஷம் நீங்க இந்த பரிகாரம் செய்யுங்க..!!
நவகிரகங்களில் முக்கியமான கிரகம் புதன். ஒருவனின் வாழ்க்கை வெற்றி வேண்டும் என்றால் அதற்கு புதன் கிரகம் சரியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு புதன் கிரகம் சரியாக அமையாது.., அந்த தோஷம் நீங்க சில பரிகாரம் பார்க்கலாம்.
புதன் பரிகாரம் :
புதன் தோஷம் உள்ளவர்கள், ஒரு வெள்ளை துணியின் ஒருபகுதியை வெட்டி எடுத்துக்கொண்டு அதில் சில பச்சைப்பயிரை வைத்து கட்டி, உங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் படத்திற்கு முன் வைக்கவும்.
தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு, முடிந்த அந்த பச்சைபயிரை எடுத்து.., உள்ளங்கையில் வைத்து மனதார புதன் பகவானை பிரார்த்தனை செய்து “ஓம் ஹராம் க்ரோம் ஜம் க்ரஹே நாதாய புதாய ஸ்வாஹா எனும் மந்திரத்தை சொல்லி வணங்கி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 48 மண்டலங்கள் செய்து வர வேண்டும். வீட்டில் செய்யும் பிரார்த்தனை மட்டுமின்றி, ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 7மணியில் இருந்து 9:30 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் புதன் தோஷம் நீங்கிவிடும்.
அல்லது புதன் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி பகவானுக்கு பச்சை பயிறு வைத்து சமர்ப்பணம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால், புதன் தோஷம் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..