திமுகவின் அசத்தல் வாக்குறுதி..!! பெட்ரோல் விலை 25 ரூபாய்..?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய பகுதிகளில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய பகுதிகளான கே.கே.நகர் மற்றும் 21 வார்டுகளில் திமுக நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹ்மத் தலைமையிலும் ஒன்றிய பகுதிகளான
சாத்கர், பத்தலபல்லி, மசிகம், பாலூர்,உள்ளிட்ட பகுதிகளில் திமுக ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன், டேவிட் தலைமையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது நகர ஒன்றிய பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், அடுத்து மோடி ஆட்சி அமைந்தால் இன்னும் விலைவாசி கடுமையாக உயரும் எனவும் இதனால் பொதுமக்கள் ஏற்கனவே பாதிபேர் கடன்காரர்களாக இருப்பதாகவும்.
மேலும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் கஜானா காலி ஆகிவிடும் என்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் பேரணாம்பட்டு பகுதியில் நீண்ட நாட்கள் கோரிக்கையான பத்தலப்பல்லி அணையை விரைவாக கட்டி முடிக்கப்படும் என்றும் சமுதாயக் கூடங்கள் கட்டி தரப்படும் மேலும் பத்தலபல்லி ஆற்றில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என கதிர் ஆனந்த் வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த பிரச்சாரத்திற்கு இந்திய கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கதிர் ஆனந்தை ஆதரித்து பேரணாம்பட்டு பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மாநில தலைவர் காதர் மொகிதீன் சாஹிப் மாநில இளைஞர் அணி செயலாளர் தயுப் தலைமையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்துக்கு திமுக செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் வேலூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலியார் சுல்தான் அஹ்மத் மற்றும் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை வாக்கு சேகரிப்பு :
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், தோப்பு, பெருமாள் கோவில், கருமாரி அம்மன் கோவில், பெரிய மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி, பொன்னாடை போர்த்தி ஆலுயரம் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர் கலைஞரைப் போல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆட்சி பொறுப்பேற்று 33 மாதத்தில் 33 ஆண்டுக்கான சாதனைகளை செய்துள்ளார். மகத்தான மகளிர் உரிமைத்தொகை மகளிருக்கு பயன்படும் வகையில் இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்.
இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடியே கல்வி உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சிறந்த திட்டங்கள் ஆகும்.
மேலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.
100 நாள் வேலையை 150 நாளாக மாற்று தினசரி ஊதியமாக 400 ரூபாயாக வழங்கப்படும்,
ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய் குறைக்கப்படும் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் ஜெகத்ரட்சகன் அவர்கள் யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் கோபுர திருப்பணிக்கு 5 கிலோ தங்கம் வழங்கினார். ரோப்க்கார் கட்டுமான பணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மேலும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வார் என உறுதி அளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..