இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சமையல் குறிப்பு…!!!
-
சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவில் தான் வைக்க வேண்டும். அப்படி பருப்பு பொங்காமல் இருக்க /4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது.
-
ஒரு கப்பில் நீரை ஊற்றி மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் சில நிமிடத்திலே தோலை நீக்கி விடலாம்.
-
சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால் தான் பொங்கி வழியாமல் சமைக்க முடியும்.
-
சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகி சாதம் சீக்கிரம் வேகும்.
-
காய்கறிகள் வேக சிறிது நீரை தெளித்தால் மட்டும் போதும், காய்கறிகள் வெந்துவிடும்.
-
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த வேர்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்து பகோடா போட்டால், பகோடா மொறுமொறு என்று ரொம்ப ருசியாக இருக்கும்,
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
