மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வருகிற 24-தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மதுரையில் அதிமுக மாநாடு நேற்று நடைபெற்றதால் மதுரையில் மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டர் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வருகிற 24-ம்தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.