மக்களவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள்..?
நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பிரதமர் மோடி பேச உள்ள நிலையில் மக்களவை கூடத்தில் இருந்து எதிர் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். காங்கிரஸ், திமுக கட்சி எம்.பி.க்கள் மட்டுமின்றி இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மக்களவையில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதியும் மறுக்கப் பட்டுள்ளது, ஒரு எம்.பிக்கு பேசும் உரிமை கூட கொடுக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என எதிர் கட்சி எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி பேச இருக்கும் பொழுது யாரும் பேசக்கூடாது என்றும்.., அவர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும்.., இந்த மக்களவை கூட்டம் அவருக்கான கூட்டம் எனவே மற்றவர்கள் பேசும் தகுதி இங்கு யாருக்கும் இல்லை.., எனவே அனைவரும் தலையாட்டி பொம்மை போல இருக்க வேண்டும், என பாஜக எம்.பி.க்கள் கூறியதால்.
மற்ற கட்சி எம்.பி.க்கள் ஆத்திரமடைந்து வெளிநடப்பு செய்து விட்டோம் என எதிர் கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Discussion about this post