மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி பதில்..
மத்திய அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிரதமர் மோடி விளக்கம் கொடுத்து வருகிறார்.
இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, அதற்கான நோட்டீஸை காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் வழங்கின.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் எடுத்து வந்தார். பின் அந்த நோட்டிஸினை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். விரைவில் இதுபற்றி விவாதம் தொடங்கியது.
நேற்று இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.., பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கே தெரியும்.
மணிப்பூர் கலவரம் குறித்து நாங்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அது தவறு., எங்கள் மீது பலரும் பொய்யான குற்றசாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நாங்கள் பல தீர்மானங்கள் வைத்துள்ளோம் அதை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறோம். சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதால் தான் மணிப்பூரில் தற்போது அமைதியான சூழல் உள்ளது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
Discussion about this post