“தீபாவளி நோன்பு விரதம்.. ” இதை செய்ய மறக்காதீங்க..!!
தீபாவளி நோன்பு., கெளரி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்.., ஏன் இருக்க வேண்டும் என்பதை பற்றி இதில் படிக்கலாம்..
தீபாவளி முடிந்த மறுநாள் அமாவாசை தினமாக இருந்தால்., அன்றைய தினத்தை தீபாவளி நோன்பு என கெளரி விரதம் என சொல்லுவார்கள்..
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
அப்படி நவராத்திரி முடிந்து அம்பிகை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்து கொன்றார்.. அந்த நாளில் இருந்து
தொடர்ந்து 21 நாட்கள் இருந்து வழிபட்டார்., அந்த 21ம் நாளையே நாம் கேதார கௌரி நோன்பு என அழைக்கிறோம்..
அதாவது இந்த நோன்பானது தீபாவளி அன்று நிறைவடையும். அதனால் தீபாவளிக்கு அடுத்த நாளை., பார்வதி தேவி தனது விரதத்தை நிறைவேற்றி ஈசனிடம் இடப்பாகம் பெற்ற நாள் என சொல்லலாம்..
இன்றைய நாளில் அதிரசம் செய்து., மாலையில் கோவில் சென்று படைப்பார்கள். அதன் பின்னர் வீட்டில் தீபம் ஏற்றி நோன்பு கயிறு கட்டி வழிபடுவது வழக்கம்..
அதேபோல் இன்றைய நாளில் காய்கறிகள், பழங்கள், அதிரசம், சுய்யம், பணியாரம் என படைப்பார்கள்..
படையலில் வைக்கும் பிரசாதங்களை., வீட்டில் உள்ளோறை தவிர வேறு யாரும் சாப்பிடக்கூடாது என சொல்லுவார்கள்..
இந்த விரதத்தை..திருமணம் ஆன பெண்கள் இருந்தால் வீட்டில் அமைதி., செல்வம்., பண வரவு., நிலைக்கும் என்பது ஐதீகம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..