கார் ஓட்டிய சிறுவன்.. பைக் மீது மோதி பச்சிளங் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்..!
குஜராத்தை சேர்ந்த ரவி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபிகா என்ற நிறைமாத மனைவியும் 6வயதில் குழந்தையும் உள்ளன.
இந்தநிலையில் ரவி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சிறுவன் ஒருவன் மது போதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
அதிக மது போதையில் இருந்ததால் சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரவியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மூன்று பேரும் படுகாயமடைந்து நிலைத்தடுமாறி கீழே விருந்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் மூவருக்கும் திவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதை தொடர்ந்து நிறைமாத கர்ப்பினியான தீபிகாவில் வயிற்றில் இருந்த குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்ததாக கூறப்படுகிறது.
ரவி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆறு வயது குழந்தை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்