இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் ரூபாயை ரிசெர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ரிசெர்வ் வாங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று டிஜிட்டல் ருபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நகரங்களான டெல்லி,மும்பை,பெங்களூரு, மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று டிஜிட்டல் ருபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அணைத்து பண மதிப்புகளையும் சோதனை முயல் டிஜிட்டல் ரூரோபாயாக வெளியீட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய்க்கு eR என்ற குறியீட்டை ரிசெர்வ் வங்கி வழங்கியுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் ரூபாய்களை icici,sbi யெஸ் வங்கி மற்றும் ஐடிஎப்சி போன்ற வங்கிகளில் முதற்கட்டமாக சோதனைக்கு பங்கேற்றுள்ளனர்.
கிரிப்டோகரன்சி என்ற உரிய வழிமுறைகள் இல்லாத பணத்தை கட்டுப்படுத்த இந்தியா இந்த முறையை பின்பற்றுகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் பணம் பெருகி வருவதால் இந்த திட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இந்த வடிவ ரூபாயை மேலும் நாடு முழுவதும் கொண்டு வரவும் நிதித்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.