இந்தியா சினிமாவில் மிக பெரும் கலைஞர்களான ரஜினிகாந்த் மற்றும் எ.ஆர்.ரஹ்மான் இருவரும் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களுக்கு மறக்கவே முடியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். மேலும் லால் சலாம் படத்தில் இருவரும் மீண்டும் இனைய உள்ளனர்.
Check who is watching @lemuskXperience #superstarrajinikanth pic.twitter.com/xIDKYDQipG
— A.R.Rahman (@arrahman) November 30, 2022
இந்நிலையில் இருவரும் சந்திக்கும் படியான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் ரஜினியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது வைரலானது. அதில் எ.ஆர். ரஹ்மான் இயக்கிய லீ மஸ்க் என்ற படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசித்து பார்க்கும் புகைப்படத்தை இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
ரஹ்மான் இயக்கிய லீ மஸ்க் திரைப்படத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி மூலம் சூப்பர் ஸ்டார் கண்டுகளிக்கும் படியான புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இந்த கதை ரஹ்மானின் மனைவி கொடுததாகவும் அதை எ.ஆர்.ரஹ்மான் இஐக்கி இருப்பதாகவும் தெரிகிறது.மேலும் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வருவதால் இரு கலைஞர்களின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.