அமேரிக்காவில் நிக் மற்றும் ஷாஹினா ன்ற தம்பதியின் வைர மோதிரம் 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களிடமே கிடைத்துள்ளது அந்த தம்பதியை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அமரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில் நிக் மற்றும் ஷாஹினா என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். நிக் அவரது மனைவி ஷாஹினாவிற்கு அந்த மோதிரத்தை கொடுத்து தன் காதலை கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஷாஹினா கழிவறையில் அந்த வைர மோதிரத்தை துளைத்துவிட்டார். பின் எவ்வளவு நாட்கள் தேடியும் கிடைக்காததால் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதனை தேடும் வேலையை கைவிட்டுள்ளனர்.
கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாடத்திற்கு பிறகு அவரது வீட்டில் கழிவறையை மாற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு மோதிரத்தை கண்டுள்ளனர். அதனை ஷாஹினா முன் காட்டிய பொழுது 21 ஆண்டுகளுக்கு முன் தான் தவறவிட்ட மோதிரம் என்பதை அறிந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த தம்பதி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் இந்த மோதிரத்தை தங்களின் அடுத்த சந்ததிக்கு கொடுக்க போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.