சோமோட்டோ நிறுவனம் இந்தியாவின் இந்த ஆண்டின் பெரிய உணவு பிரியர் யார் என்பதை அறிவித்துள்ளது. அதன்படி அவர் ஒருவர் 2022ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 3330 உணவுகளை ஆர்டர் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
சோமோட்டோ நிறுவனம் ஆண்டு முழுவதும் அவர்கள் நிறுவனத்தின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள், பிரபலமான உணவுகள் மற்றும் அதிகம் அர்டர் செய்த நபர்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது ஒரே ஆண்டில்அதிகம் ஆர்டர் செய்த பட்டியலை அறிவித்துள்ளது. அதில், டெல்லியை சேர்ந்த அங்கூர் என்பவர் அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஒரே ஆண்டில் மற்றும் இதுவரை 3330 முறை சோமோட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி அவர் தினசரி சராசரியாக 9 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை இந்தியாவின் மிக பெரிய FOODIE என்றும் கவுரவித்துள்ளது. இதற்கு முன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தை பிடித்ததை அந்த நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.