ஐ.பி.எல் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தோனி கோடி கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பெங்களுருவை சேர்ந்த புளு ஸ்மார்ட் என்ற ஆப் நிறுவனத்தில் ஏராளமான பிரபலங்கள் முதலீடு செய்திருந்தனர். ஓலா போன்ற கார் சேவையை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக கடந்த 17ம் தேதி வாடிக்கையாளர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 4,100 கோடியை இந்த நிறுவனம் முதலீடாக திரட்டியுள்ளது.
புளூஸ்மார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் தொகையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோல்ஃப் கிட்கள்குடியிருப்புகள் டிராவல் உள்ளிட்டவற்றுக்காக 260 கோடிக்கு மேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ப்ளூஸ்மார்ட்டில் 33 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக செபியும் அவர்களிடத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் தோனியும் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தன் செயல்பாடுகளை நிறுத்தியிருப்பதால், தோனியும் பல கோடிகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.