திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்.!!
சென்னையில் இருந்து திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதல். விடுமுறை நாள் என்பதால், வழக்கத்தை விட இன்னும் அதிக பக்தர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
முக்கியமாக நேற்று காலை சென்னை மாதவரம் பகுதியில் இருந்து பொன்னியம்மன் தேவஸ்தானம் சார்பில், 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடி, பால் குடம் எடுத்தும், மற்றும் வேல் குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காலை 8:00 மணி, மாலை 12:00 மணி மற்றும் மாலை 6:00 மணி ஆகிய மூன்று வேளையிலும் மூலவர் “சுப்பிரமணியனுக்கு” பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.
திருத்தணி முருகன் இங்கு வள்ளியை மனம் முடிந்ததால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் ஆகும். என்பது பலரும் சொல்லப்படும் உண்மை.
இங்கு இருக்கும் 365 படிகளும் 365 நாட்களை குறிக்குமாம். இந்த கோவிலில் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சாந்தமாக காட்சி அளிப்பார். இங்கு வழங்கப்படும் தீர்த்தங்கள் இந்திர தீர்த்தம், சரவணப் பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், வழங்கப்படும்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி