உறவுகள் இருந்தும் அனாதை தான்..! ஊரும் உறவும் – 12
இந்த உலகில் அனைத்து ஜீவன்களும் ஏங்குவது “அன்பு” எனும் ஒன்றிற்காக மட்டும் தான். “அன்பு காட்டப்படும் இடத்தில் அன்பை மதிப்பதில்லை, ” அன்பிற்காக எங்கும் இடத்தில் அன்பு கொடுக்கப் படுவதில்லை..,
உறவுகள் இருந்தும் அன்பிற்காக எங்கும் ஒரு பெண்ணை சந்தித்தேன்.., அவரை பற்றி இதோ உங்களுக்காக.
தெருவோரம் இருக்கும் எத்தனையோ கை வண்டி கடைகளில் சாப்பிட்டு இருப்போம்.., அதில் ஒரு சில கடைகள் மறக்க முடியாதவையாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன் நான் சந்தித்த கடையின் அக்காவும் அப்படி தான்.
இரவு சரியான பசி.., நானும் என் தோழியும் தெருவோர கடைக்கு சென்று சாப்பிட்டு கொண்டிருந்தோம். அங்கு எங்கள் பக்கத்தில் மற்றொரு அக்கா வந்து டிபன் வாங்கினார்.
கடைக்காரர் சொன்னார் தோசை போடுவதற்கு நேரம் ஆகும் 10 நிமிடம் மட்டும் காத்து கொண்டு இருங்கள் என்று.., அதற்கு அந்த அக்காவும் சரி என்று சொன்னார். 15 நிமிடம் கழித்து அண்ணா எவ்ளோ நேரம் அண்ணா பசிக்குது என்று சொல்லி கத்திய பின்னரே தோசை வந்தது.
தோசையை கையில் வாங்கியதும்.., ஒரு பெண் வந்து. என் குழந்தைகள் பசியில் அழுகிறது எதாவது இருந்தா குடுங்க என்று கேட்டார்.
அந்த இடத்தில் யாராக இருந்தாலும்.., கடையில் ஆர்டர் சொல்லி வாங்கி கொடுப்போம். ஆனால் என் பக்கத்தில் இருந்த அக்கா.., இந்தாங்க அக்கா என் கிட்ட இருக்க இந்த டிபன் எடுத்துக்கொண்டு போங்க.., நான் இதில் இன்னும் கையே வைக்க வில்லை என்று சொல்லி கொடுத்துவிட்டார்.
அவரும் வாங்கி கொண்டு நன்றி சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்..,
அந்த அக்காவுடன் இருந்த தோழி பசிக்கிறது என்று சொல்லி வாங்கி இவங்க கிட்ட கொடுத்த.., அதுக்கு கடைக்காரர் கிட்ட இன்னொரு இட்லி, தோசை எதையாவது வாங்கி கொடுக்கலாமே என்று கேட்டார்.
அதற்கு அந்த அக்கா சொன்ன பதில்.., எனக்கு பசி வந்தவுடன் அதை போக்க, என் அம்மா கூட இல்ல ஆனா அந்த குழந்தைகளுக்காக கேட்க அவங்க அம்மா இருக்காங்க அதான் உடனே கொடுத்துட்டன்.
நாம் அழும்பொழுது அந்த கண்ணீரை துடைக்க நமக்கென்று ஒரு உறவு இல்லை என்பதன் ஏக்கம்.., உறவோடு வாழாத எனக்கு மட்டும் தான் தெரியும் என சொன்னார்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post