அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி..!! முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு…?
தமிழ்நாட்டில் முதலீடுகளை வலுப்படுத்துவதற்காக இந்த மாதம் 27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கிறார்.. ஆகஸ்ட் 27ம் தேதி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.. இந்நிலையில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11மணிக்கு தலைமை செயலகத்தில் கூடவுள்ளது..
இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் ஸ்டாலின் தலைமையிலான அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் குறித்தும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்கள் குறித்த ஆலோசனை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொளத்தூரில் நடைபெற்று வரும் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பத்திரியாளர்களை சந்தித்து பேசிய போது., “விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலுத்து கொண்டே போகிறது என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு. “கோரிக்கை வலுக்கிறது ஆனால் பழுக்கவில்லை” முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதில்
கொடுத்திருந்தார்..
கடந்த சில நாட்களுக்கு முன் கூட அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது, வருகின்ற ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அவரை தொடந்து அமைச்சர் கீதா ஜீவனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று அங்கீகரித்துப் பேசியிருந்தார்..
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் இந்த சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமோ என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.. இது குறித்த முடிவும் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா..? அமைச்சரவையில் இதன்பின் மாற்றங்கள் நிகழுமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..