திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றுள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞரை இளம்தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் வகையில் அண்ணன்@EzhilarasanCvmp தொகுத்துள்ள ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ நூலை இன்று வெளியிட்டுமகிழ்ந்தோம்.வாழ்த்திப்பேசிய நண்பர்@Anbil_Mahesh,அண்ணன் நக்கீரன் கோபால்& இயக்குநர் @karupalaniappan ஆகியோருக்கு நன்றி. pic.twitter.com/x8P9ecOeTC
— Udhay (@Udhaystalin) October 7, 2022
மேலும் நக்கீரன் கோபால் மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது இந்த புத்தகம் தயார் செய்ய கிட்டத்தட்ட சுமார் 6 மாத காலம் ஆனது.
கலைஞர் கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது நான் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இந்த புத்தகத்தை வெளியிட வந்து இருக்கிறேன்.
#திருவாரூர்_முத்துவேல்_கருணாநிதி_எனும்_நான் @Anbil_Mahesh @EzhilarasanCvmp #NakkeeranGopal @karupalaniappan pic.twitter.com/7zjiP0Q9Kv
— Udhay (@Udhaystalin) October 7, 2022
இளைஞர் அணி பொறுப்பு வழங்கும் பொழுது நான் வேண்டாம் என்று கூறினேன்.வேற ஏதாவது சிறிய பொறுப்பு வழங்குங்கள் என்று தெரிவித்தேன். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாரதிய ஜனதா அரசு பழிவாங்க நினைத்தாலோ, தமிழகத்தின் உரிமைகளை பறித்தாலோ, திமுகவின் போர்க் குணம் வெளிப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.