சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
இதில் பேசிய நடிகை சாய் பல்லவி தற்போது இருக்கும் சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு நிர்பயா பெண்கள் ஆலோசனை மையம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்த உடனே, நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பேசினார். மேலும் இந்த மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையே அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.