அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யாஷ், அண்மையில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஜே.ஜே.பெரி உடன் இணைந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பிரசாந்த் நீல் இயக்கிய நடித்த ‘கே.ஜி.எஃப் 2’ படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் யாஷின் அடுத்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்தப் படத்தை, ‘முஃப்தி’ என்ற கன்னடப் படத்தை இயக்கிய நாரதன் இயக்க போகிறார் என கூறப்பட்டது. இது யாஷின் 19-வது படமாக உள்ள நிலையில் வரலாற்றுப் பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகிவருகிறது.
இதற்கான பயிற்சியை யாஷ் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் போவதக கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல ஃபார்முலா ஒன் மோட்டார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் கே ஜி எஃப் நடிகர் யாஷ் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.