மக்களை நடுங்க வைத்த டெங்கு..!! ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை..?
டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம் என மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேகரித்து வகைக்கும் ட்ரம், தொட்டி போன்றவற்றை மூடியே வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்த அவர் 3 ஆயிரத்து 317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்…
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்…
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை:
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்.1-ஆம் தேதி ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது..
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை :
தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருவதாக கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..